முறிந்து விழுந்த பனை மரம் மின்கம்பம், 2 வீடுகள் சேதம்
முறிந்து விழுந்த பனை மரம் மின்கம்பம், 2 வீடுகள் சேதம்
ADDED : செப் 14, 2026 01:11 AM

வடமதுரை: வடமதுரை அருகே பலத்த காற்றால் பனை மரம் முறிந்து விழுந்ததில் 2 வீடுகள் சேதமானதுடன், மின்கம்பமும் முறிந்து மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.
வடமதுரை மோர்பட்டி மேற்குத் தெருவின் பின்புறம் இரு பனை மரங்கள் இருந்தன. நேற்று முன் தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் ஒரு பனை மரம் முறிந்து மூதாட்டி சின்னம்மாளின் தொகுப்பு வீட்டின் மீது விழுந்தது. அதே நொடியில் எழும்பிய மரம் எதிர்பக்கம் உள்ள நாகராஜின் வீட்டின் தகர கொட்டகையின் மீதும் விழுந்தது.
இதனால் இரு வீடுகளிலும் முன் புற தாழ்வாரங்கள் சிதைந்தன. குறுக்கே சென்ற மின் ஒயரில் விழுந்ததில் கம்பமும் முறிந்து விழுந்தது. இதனால் நேற்று மாலை வரை இப்பகுதிக்கான மின் விநியோகம் சீரமைக்கப்படாததால், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேரத்தில் அவதிக்கு உள்ளாகி பரிதவித்து வருகின்றனர்.
