ADDED : ஆக 21, 2025 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: விட்டல்நாயக்கன்பட்டி காமாட்சிபுரம் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான காடு உள்ளது. இதில் ஏராளமான பனை மரங்கள் உள்ளது. நேற்று மாலை அடையாளம் தெரியாத நபர் சிகரெட்டை புகைத்துவிட்டு அணைக்காமல் போட்டு சென்றார்.
காற்று காரணமாக கீழே கிடந்த மட்டையில் பற்றிய தீ கொழுந்து விட்டு எரிந்து மரங்களில் தொங்கி கொண்டிருந்த மட்டைகளிலும் பற்றி எரிய துவங்கியது. வேடசந்துார் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.