sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மரக்கன்றுகள் நட விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊராட்சி; 12 மரக்கன்றுகளை நட்டு வேலி அமைத்து பராமரிப்பு

/

 மரக்கன்றுகள் நட விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊராட்சி; 12 மரக்கன்றுகளை நட்டு வேலி அமைத்து பராமரிப்பு

 மரக்கன்றுகள் நட விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊராட்சி; 12 மரக்கன்றுகளை நட்டு வேலி அமைத்து பராமரிப்பு

 மரக்கன்றுகள் நட விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊராட்சி; 12 மரக்கன்றுகளை நட்டு வேலி அமைத்து பராமரிப்பு


ADDED : பிப் 09, 2026 04:51 AM

Google News

ADDED : பிப் 09, 2026 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் மாவட்டத்தில் பிற ஊராட்சிகளுக்கு முன்னுதாரணமாக 'மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்' எனும் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், தான் நிர்வகித்து வரும் நாற்றாங்காலில் இருந்து அரிய வகை 12 ஆயிரம் மரக்கன்றுகளை ரோடுகளின் இருபுறமும் மட்டும் இன்றி, மந்தை வெளி, கிராமங்களில் உள்ள மேய்ச்சல் நிலப்பகுதிகளில் நட்டு, அதற்கு தண்ணீரிட்டு பராமரித்து 6 அடிக்கு உயரத்திற்கு மேல் வளர்த்து பொது மக்கள், இளைஞர்களுக்கு மரவளர்ப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது குஜிலியம்பாறை ஒன்றியம் ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி நிர்வாகம்.

அரிய வகை மரக்கன்றுகள் இவ்வூராட்சியில் புதுக்கோட்டை, பில்லமநாயக்கன் பட்டி, ஆர்.பி., பள்ளப்பட்டி, கருங்குளம், செங்குளத்துப்பட்டி, பூசாரிபட்டி, கருதனம்பட்டி 65 உட்கடை கிராமங்கள் உள்ளன. மேற்கூறிய இந்த ஒன்றியத்தில் மிகப்பெரிய ஊராட்சியான இங்கு விவசாயமும் கால்நடை வளர்ப்பும் முக்கியத் தொழிலாகும். இவ்வூராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பூசாரிபட்டி பிரிவு மேற்குப் பகுதி அருகே, பெரிய அளவிலான நாற்றுப் பண்ணை அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இப்பண்ணையில் இருந்து தாணி, இழுப்பை, சிஸ்சு, ஈட்டி, வெப்பாலை, ஆவி, மகாகனி என விவசாயத்திற்கும், பொது மக்களுக்கும் பயன்தரும் வகையில் 40 ஆயிரம் அரிய வகை மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு உள்ளன.

தீவிர நடவுப்பணி அதில் இருந்து தற்போது 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. அதை ஆடு மாடுகள் கடிக்காத வகையில் வலை கட்டி, 100 நாள் திட்டத் தொழிலாளர்களைக் கொண்டு தண்ணீரிட்டு பராமரிக்கின்றனர். குறிப்பாக ஆர்.புதுக்கோட்டை - பில்லமாநாயக்கன்பட்டி ரோடு, உசிலம்பட்டி முத்தாநாயக்கன் புதுார் ரோடு, பள்ளப்பட்டிப் பிரிவு,- கூம்பூர் ரோடு உள்ளிட்ட ரோட்டின் ஓரப்பகுதிகள் மட்டும் இன்றி, பில்லமாநாயக்கன் குளம், அண்ணா நகர் புதிய குளம், அய்யாமலை கரடு தெற்கு, வடக்கு புதிய குளங்கள், செங்குளத்துப்பட்டி மந்தை, வண்ணனுார் மந்தை என எங்கு பார்த்தாலும் மரக்கன்றுகளை நட்டு அவை 6 அடி முதல் 10 அடி உயரம் வளர்ந்த நிலையில் அடர்ந்து வளர்ந்துள்ளன.

வருவாய் ஈட்ட வழி கே.பெரியசாமி,ஊராட்சி செயலாளர், ஆர்.புதுக் கோட்டை ஊராட்சி: ராட்சிப் பகுதி முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே, மரக்கன்றுகள் வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். பூசாரிபட்டி பிரிவு அருகே 50 புளிய மரங்கள் நடப்பு ஆண்டில் காய்ப்புக்கு வந்து விட்டன. வரும் காலங்களில் ஊராட்சிக்கு வருமானம் வர உள்ளது. நடப்பு ஆண்டில் வறட்சி வர உள்ளது.

இருந்தாலும் 100 நாள் திட்ட தொழிலாளர்களைக் கொண்டும், டிராக்டர் மூலம் தண்ணீர் விட்டாவது மரக்கன்றுகளை காப்பாற்ற உறுதி ஏற்றுள்ளோம். ஆர்.புதுக்கோட்டை ஊராட்சியை பசுமை நிறைந்த ஊராட்சியாக மாற்றும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம்., என்றார்.






      Dinamalar
      Follow us