தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஊராட்சி அலுவலகம் முற்றுகை

ஊராட்சி அலுவலகம் முற்றுகை

ஊராட்சி அலுவலகம் முற்றுகை


UPDATED : நவ 26, 2026 06:31 PM

ADDED : நவ 26, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 06:31 PM ADDED : நவ 26, 2026 06:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள், மா.கம்யூ., நா.த.க.,வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஊராட்சியில் கூடுதல் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும், பணித்தளப் பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். மண்டல துணை பி.டி.ஓ., சேதுராமன், ஊராட்சி செயலர் தீன்முகமது ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் முருகன், மா.கம்யூ., ஒன்றியச் செயலாளர் வடிவேல், நிர்வாகிகள் வெள்ளைக்கண்ணன், குமார், நா.த.க., நிர்வாகி பிரபாகரன் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us