UPDATED : ஆக 11, 2026 08:46 PM
ADDED : ஆக 11, 2026 08:40 PM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி:ஆத்துார் ஒன்றியம் பித்தளைபட்டி ஊராட்சி பகுதிக்கு காமராஜர் நீர்த்தேக்கத்தில் இருந்து குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சில வாரங்களாக இப்பகுதியில் குடிநீர் வழங்கலில் குளறுபடிகள் நீடிக்கிறது. அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. ஆவேசமடைந்த இப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தின் முன் திரண்டனர். ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கோஷம் எழுப்பினர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தால் கலைந்தனர்.
