ADDED : பிப் 10, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை - கொடைக்கானல் ரோடு வழித்தடத்தில் 20 கிலோ மீட்டர் துாரத்திற்கு தண்டவாளம் புதுப்பிக்கும் பணி நடக்கிறது.
இதனால் சில ரயில்கள் திண்டுக்கல் வழித்தடத்தில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு தாமதமாக புறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை 8:00 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்ட கோவை -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 1:30 மணிக்கு திண்டுக்கல் வந்தது. மதியம் 1:35 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில் தண்டவாள பணிகளால் மதியம் 3:00 மணிக்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.