ADDED : செப் 20, 2026 05:53 PM
அ நிறம் | அளவு
எரியோடு: எரியோடு நாகையகோட்டை என்.அன்னசமுத்திரத்தில் பூபதியின் தோட்டத்தில் இருக்கும் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் 2 வயது மதிக்கத்தக்க ஆண் மயில் ஒன்று இறங்கியது.
பின்னர் மேலே வர முடியாமல் 2 மணி நேரமாக தவித்தது. அப்பகுதிக்கு சென்ற நெல்லிக்கனி அறக்கட்டளை நிறுவனர் சிவா குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையத்துறையினருக்கு தகவல் தந்தார். இதையடுத்து நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி மயிலை மீட்டு வந்து அதற்கு தண்ணீர் வழங்கி பின்னர் தொப்பையசாமி மலைப் பகுதியில் விடுவித்தனர்.
