/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காய்கறி உற்பத்தி விவசாயிகளுக்கு பென்ஷன்; விவசாய குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
/
காய்கறி உற்பத்தி விவசாயிகளுக்கு பென்ஷன்; விவசாய குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
காய்கறி உற்பத்தி விவசாயிகளுக்கு பென்ஷன்; விவசாய குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
காய்கறி உற்பத்தி விவசாயிகளுக்கு பென்ஷன்; விவசாய குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : ஜன 25, 2025 05:39 AM
திண்டுக்கல் : ''காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பென்ஷன் வழங்க வேண்டும் ''என விவசாயிகள் வலியுறுத்தினர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் பாண்டியன், ரெட்டியார் சத்திரம் நாற்றுபண்ணை துணை இயக்குநர் திலீப் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகள் விவாதம்
கலெக்டர்: அவசர வேலைகளுக்கு செல்லும் விவசாயிகள் இருந்தால் உடனே மனு கொடுத்து விட்டு செல்லலாம்.
கணேசன், ஆவிளிப்பட்டி: ஆவிளிப்பட்டி சுற்று பகுதி கண்மாய்களில் பழைய மதகுகள் எல்லாம் சேதமாக உள்ளது. இதனால் நீர் சேகரிப்பதற்கு சிரமமாக உள்ளது.
கலெக்டர்: மதகுகள் சீரமைக்கப்படும்.
நாகராஜன், குட்டத்துப்பட்டி: எங்கள் பகுதியில் அதிகளவில் பூ விவசாயம் நடக்கிறது. பாதை இல்லாமல் அதிகாலையில் இருளில் நடந்து வருவதற்கு சிரமமாக உள்ளது.
ராஜேந்திரன், ரெட்டியார் சத்திரம்: ரெட்டியார் சத்திரம் பகுதி தோட்டக்கலைத்துறை நாற்றுப்பண்ணையில் எந்தெந்த நாற்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது என தெரிவிக்க வேண்டும்.
துணை இயக்குநர்: காய்கறி நாற்றுகள் தற்போது இலவசமாக வழங்குவதில்லை. மானிய விலையில் வழங்குகிறோம்.
மாரிமுத்துராமன், திண்டுக்கல்: காய்கறிகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பென்ஷன் வழங்க வேண்டும்.
கலெக்டர்: பரிசீலனை செய்யப்படும்.
வீரப்பன், குஜிலியம்பாறை: வெள்ளோடு கண்மாய்க்கு குடகனாற்று நீர் அழகாபுரி அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் கரூர் மாவட்டத்திலுள்ள வெள்ளியணை வரை செல்கிறது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கூம்பூர், ஆர்.வெள்ளோடு கிராமங்களில் கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. அணையின் அருகிலுள்ள இக் கிராமங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்க வேண்டும்.
கோபால், பழைய வத்தலகுண்டு: பழைய வத்தலகுண்டு கண்மாயிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 33 ஆண்டுகளாக மனு அளிக்கிறோம் இதுவரை நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தால் போலீசார் முன்னிலையில் கிராம மக்களே ஆக்கிரமிப்புகளை அகற்ற தயாராக உள்ளோம்.
கலெக்டர்: அரசுக்கு சொந்தமான கண்மாய் விரைவில் அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். பொதுமக்கள் நேரடியாக இப்பணியை மேற்கொள்ளக் கூடாது என்றார்.

