ADDED : செப் 20, 2026 07:34 PM
ரெட்டியார்சத்திரம்: தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு, ரெட்டியார்சத்திரத்தில் நடந்தது. தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சாலாட்சி வரவேற்றார். மாநில துணை தலைவர் அன்பழகன், துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் செல்வராஜ் சங்க செயல்பாடு குறித்த அறிக்கை வாசித்தார். பொருளாளர் குமரம்மாள் வரவு செலவு திட்ட அறிக்கை வாசித்தார்.
புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி, 2026 பிப்ரவரி 13க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கும் குடும்ப பென்ஷன், குறைந்தபட்ச பென்ஷன் 6,750 ரூபாய் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் நடராஜன், முன்னாள் மாநில துணை தலைவர் சக்திவேல் பங்கேற்றனர்.
-
