ADDED : பிப் 15, 2026 05:40 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: 70வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கவேண்டும், பழைய ஓய்வூதிய த்திட்டத்தை அமல்படுத்தவேணடும் என்பன உள்ளிட்ட 7 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வுபெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலசங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் மோசஸ் தலைமை வகித்தார். அனைத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தலைவர் ஜெயசீலன் துவக்கிவைத்தார். ஓய்வு பள்ளி, கல்லுாரி ஆசிரியர் சங்க செயலாளர் அமல்ராஜ், இணை செயலாளர் வெள்ளைச்சாமி கலந்துகொண்டனர்.
