UPDATED : செப் 08, 2026 06:13 PM
ADDED : செப் 08, 2026 05:40 PM
திண்டுக்கல்:தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் திண்டுக்கல் மாவட்ட கிளை சார்பில் ஒன்றிய அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் ஜெயசீலன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கேசவன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். நெடுஞ்சாலைத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் ராஜமாணிக்கம், தமிழ்நாடு போக்குவரத்துத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் அமல்ராஜ் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ காப்பீடு அட்டை விநியோக நடைமுறைகளை சீரமைக்க வேண்டும். காப்பீடு குளறுபடிகளை நீக்க வேண்டும். 100 சதவீத பணமில்லா மருத்துவ சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாவட்டப் பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்தார்.
