UPDATED : செப் 29, 2026 10:16 PM
ADDED : செப் 29, 2026 09:33 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:அனைத்துத்துறை மாநில அரசு ஓய்வூதியர் கூட்டமைப்பு திண்டுக்கல் மாவட்ட கிளை சார்பில் திண்டுக்கல் ஒன்றிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. குடும்ப ஓய்வூதியம் உயர்த்தப்பட்டு ஓய்வூதியங்களில் சமத்துவம் உறுதி செய்யப்பட வேண்டும். பாரபட்சமான நடைமுறைகள் நீக்கப்பட வேண்டும்.
ரயில், விமான டிக்கெட்டுகளில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட 50 சதவீத கட்டண சலுகை மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட தலைவர் ஜெயசீலன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மண்டல செயலாளர் பால்ராஜ், மாவட்ட தலைவர் அமல்ராஜ், மாவட்ட பொருளாளர் உமாபதி, நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
