/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடிதண்ணீரில் புழுக்கள்; அச்சத்தில் மக்கள்
/
குடிதண்ணீரில் புழுக்கள்; அச்சத்தில் மக்கள்
ADDED : ஆக 27, 2025 12:53 AM

நத்தம்; நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சியில் உள்ளது ஒடுகம்பட்டி கிராமம். இங்கு 300-க்கு மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி சார்பில் ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்னன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த குடிநீரையே அருந்துகின்றனர்.
நேற்று காலை மந்தை முன்பு உள்ள குடிநீர் குழாயில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்தபோது புழுக்களுடன் தண்ணீர் வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,' குடிநீரில் புழுக்கள் வருவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தபட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்,' என்றனர்.