sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அதிவேக வாகனங்களால் கிராமங்களில் பதறும் மக்கள் லாரி, வேன்களுக்கு கண்டிப்பு அவசியம்

/

அதிவேக வாகனங்களால் கிராமங்களில் பதறும் மக்கள் லாரி, வேன்களுக்கு கண்டிப்பு அவசியம்

அதிவேக வாகனங்களால் கிராமங்களில் பதறும் மக்கள் லாரி, வேன்களுக்கு கண்டிப்பு அவசியம்

அதிவேக வாகனங்களால் கிராமங்களில் பதறும் மக்கள் லாரி, வேன்களுக்கு கண்டிப்பு அவசியம்

1


ADDED : ஜன 28, 2026 06:11 AM

Google News

ADDED : ஜன 28, 2026 06:11 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமங்கள் வழியே பயணிக்கும் லாரி, வேன்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிர் பலி ஏற்படுகிறது.மக்கள் தங்கள் வாழும் கிராமங்களிலே ஒருவித பதட்டத்துடன் இருக்கும் பரிதாப நிலை உள்ளது.

மாவட்டத்தில் இருக்கும் ஓடைகள், குளங்களில் இருந்து மண், மணல் எடுக்க அதிகளவில் டிப்பர் லாரிகள் கிராமப்பகுதிகளுக்குள் இயக்கப்படுகின்றன.

இதே போல் 50 கி.மீ., துாரத்திற்கு அப்பால் இருக்கும் மில்களுக்கும் தொழிலாளர்களை தினமும் வேன்கள் மூலம் அழைத்து சென்று திரும்ப கொண்டு வந்துவிடுகின்றனர்.

மில்களுக்கு பெரும்பாலாலும் கிராமங்களில் இருந்தே தொழிலாளர்கள் கிடைக்கின்றனர். மில் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து செல்ல ஒவ்வொரு வேனுக்கும் ஒரு வழித்தடத்தை உருவாக்கி பல கிராமங்களுக்குள் சென்று வருகின்றன.

இத்தகைய கிராமங்களை இணைக்கும் ரோடுகள் பெரும்பாலும் 3.75 மீட்டர் அகலமே கொண்டு குறுகிய ரோடுகளாக உள்ளன. அகலம் குறைவான ரோடு என தெரிந்தும் லாரிகள் அதிக வேகமாக இயக்கப்படுகின்றன. டூவீலர்களில் பயணிப்போர், ரோட்டோரங்களில் வசிப்போர் அச்சமடையும் வகையில் இந்த லாரிகள், வேன்களின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் அடிக்கடி லாரி, வேன்களை மறித்து போராட்டங்களில் ஈடுபடுவதும் நடக்கிறது.

கிராமங்களுக்குள் அதிகமாக செல்வதை தவிர்க்க வாகன உரிமையாளர்கள், டிரைவர்களுக்கு அவ்வப்போது தகுந்த ஆலோசனை, அறிவுரை கூட்டங்கள் நடத்துவதன் மூலம் ஓரளவிற்கு பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்திலும் கவனம் செலுத்த முன்வர வேண்டும்.






      Dinamalar
      Follow us