/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கழிப்பறை இல்லை; ரேஷன் கடைக்கு கட்டடம் இல்லை சிரமத்தில் திண்டுக்கல் 35வது வார்டு மக்கள்
/
கழிப்பறை இல்லை; ரேஷன் கடைக்கு கட்டடம் இல்லை சிரமத்தில் திண்டுக்கல் 35வது வார்டு மக்கள்
கழிப்பறை இல்லை; ரேஷன் கடைக்கு கட்டடம் இல்லை சிரமத்தில் திண்டுக்கல் 35வது வார்டு மக்கள்
கழிப்பறை இல்லை; ரேஷன் கடைக்கு கட்டடம் இல்லை சிரமத்தில் திண்டுக்கல் 35வது வார்டு மக்கள்
ADDED : செப் 14, 2025 03:42 AM
திண்டுக்கல்: பொது கழிப்பறை இல்லை, ரேஷன் கடைக்கு கட்டடம் இல்லை என குறைகளுடன் திண்டுக்கல் மாநகராட்சி 35வது வார்டில் மக்கள் அடிப்படை தேவையில் ஆரம்பித்து, குழந்தைகள், முதியவர்களுக்கான தேவைகள்வரை பிரச்னைகள் கொட்டிக்கிடக்கிறது.
பர்மா காலனி, ராஜலட்சுமி நகர், ஒத்தக்கண்பாலம், சாமியார்தோட்டம், குருநகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் பாதாள சாக்கடை அடைப்புகளால் தெருக்களில் கழிவுநீர் ஓடுகிறது. முடிவடையாத பணியால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சிறு கவனக்குறைவு ஏற்பட்டாலும் விபத்தை உருவாக்கும் அபாயமாக உள்ளது. முதியோர், குழந்தைகள் எதிர்ப்பார்ப்பாக உள்ள பூங்காக்கள் சீரமைக்கப்படாமல் புதர்மண்டி கிடக்கிறது. மக்கள்தேவையான அங்கன்வாடி, பொதுக்கழிப்பறை நடைபாதை என பிரச்னைகள் ஏராளம் உள்ளது.
கண்டுகொள்ளவில்லையே கார்த்திக், மாவட்டத்தலைவர், பா.ம.க., சமூக ஊடகப்பிரிவு: வார்டில் பல இடங்களில் பாதாள சாக்கடை மேன் ேஹால்கள் மூடப்படாமல்திறந்து கிடக்கிறது. சித்ரா மஹால் அருகே திறந்தே கிடக்கும் பாதாள சாக்கடையால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதுகுறித்துபுகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் இல்லை. இதனால் 20 குழந்தைகள்பக்கத்து வார்டில் இருக்கும் பாலர்வாடிக்கு சென்று வருகின்றனர். முத்துச்சாமி குளக்கரை நடைபாதை சீரமைக்காமல் உள்ளது . மின் விளக்கு வசதி இல்லாததால் நடைபயிற்சி செல்வோர் சிரமத்தை சந்திப்பதோடு விஷ பூச்சிகளின் தாக்குதலுக்கு ஆளாகும்ஆபத்தும் நேர்கிறது.
கேள்விக்குறியாகும் பாதுகாப்பு சுரேஷ், சாமியார்தோட்டம்: வார்டு மக்களுக்கு பொதுக்கழிப்பறை இல்லாதது பெரும் அவலமாக உள்ளது. பல இடங்களில் சிறுமின்விசைத்திட்ட தண்ணீர் தொட்டிகள் பயன்பாடில்லாமல் காற்று வாங்கிக்கொண்டிருக்கிறது. மழை பெய்தால் சாலைகளில் கழிவுநீர்ஓடுகிறது. சாக்கடை துார்வாரப்படுவதில்லை. ரேஷன் கடைக்கென சொந்த கட்டடம் இல்லை. வார்டில் 3 இடத்தில் பூங்காக்கள்இருந்தும் மக்களுக்கு பயன் இல்லை. அவற்றில் காடுபோல் களைசெடிகள் வளர்ந்திருக்கிறது. சமூகவிரோதிகள் கூடாரமாகவும் பூங்காக்கள் மாறி வருகிறது. இதனால் குடியிருப்புவாசிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
கவனம் செதுத்தப்படும் ஜோதிபாசு, கவுன்சிலர் (மார்க்சிஸ்ட்): வார்டில் பொதுக்கழிப்பறை இல்லாத குறையை நீக்குவதற்கு எம்.பி., நிதி ஒதுக்கீட்டில் கட்டடபணிகள் நடந்து வருகிறது. விரைவில் பொதுக்கழிப்பறை பயன்பாட்டுக்கு வரும். அங்கன்வாடி இல்லாத நிலையை பலமுறைமாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளேன்.
நடைபயிற்சி செல்பவர்களின் சிரமம் அறிந்து முத்துசாமி குளத்தை சீரமைக்க கோரிக்கை வைத்திருக்கிறேன். ஆனால்எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. வார்டுக்குள் இருக்கும் பூங்காக்களை சீரமைத்து பயன்பாட்டுக்குகொண்டு வர மனு அளிக்கப்பட்டுள்ளது. பூங்காவை பராமரிக்க ஆட்கள் இல்லை என கூறுவதால் கிடப்பில் கிடக்கிறது.ஒத்தக்கண் பாலத்தில் மழைநீர்தேங்குவதை வார்டுக்குள் நடக்கும் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பின்பே சரிசெய்ய முடியும்.வார்டில் இருக்கும் மற்ற பிரச்னைகள் மீதும் கவனம் செதுத்தப்படும் என்றார்.