/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான ரோடுகளால் தவிக்கும் கொம்பேறிபட்டி மக்கள்
/
சேதமான ரோடுகளால் தவிக்கும் கொம்பேறிபட்டி மக்கள்
ADDED : பிப் 03, 2026 06:47 AM

வடமதுரை: சேதமான ரோடுகளால் போக்குவரத்து வசதி குறைவால் கொம்பேறிபட்டி ஊராட்சி மக்கள் பரிதவிக்கின்றனர்.
செ ட் டிகளத்துார், புதுக்கொம்பேறிபட்டி, வல்லமகொண்டமநாயக்கனுார், ஸ்ரீராமபுரம், வெங்கடாசலபுரம், செம்மனாம்பட்டி, காடையனுார், ஊரானுார், கருங்கல்பட்டி, கொம்பேறிபட்டி, சீத்தப்பட்டி, மம்மானியூர், அரசபுரம், மேற்கு களம் உள்ளடக்கிய இந்த ஊராடசியில் அய்யலுார் எரியோடு ரோடு செல்லும் பகுதி துவங்கி மம்மானியூர் மலை அடிவாரம் வரையில் நீளவாக்கில் அமைந்துள்ள ஒரு ஊராட்சியாக கொம்பேறிபட்டி உள்ளது. இதனால் போக்குவரத்து வசதிக்கு அனைவரும் நேர் கோடு போல் இருக்கும் இந்த ஒரு ரோடு மூலம் கொம்பேறிபட்டி வந்து பிரிந்து செல்ல வேண்டும்.
க டைசி மலை கிராமமான மம்மானியூருக்கு ஒரு நாளில் 3 டிரிப் மட்டுமே பஸ் வசதி வழங்கப்பட்டுள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர். சீத்தப்பட்டி, கருங்கல்பட்டி, மம்மானியூர் ரோடுகள் சேதமடைந்து கிடக்கின்றன.
ப ல இடங்களில் ரோட்டில் நீர் தேங்கி விரைவில் சேதமடைகிறது.
இதனால் மீண்டும் ரோடு புதுப்பித்தல் பணி நடக்கும் வரை மக்கள் அதிக சிரமங்களை சந்திக்கின்றனர்.
-திறந்த வெளியால் அவதி எ ஸ்.ராஜ ரத்தினம், சமூக ஆர்வலர், கொம்பேறிபட்டி: கொம்பேறிபட்டி ஊராட்சி மக்களில் பெரும்பகுதியினர் வெளியூர்களுக்கு செல்ல செட்டிகளத்துார் பஸ் நிறுத்தத்திற்கே வர வேண்டும். செட்டிகளத்துாரில் ரோட்டில் தேங்கும் மழை நீர் வெளியேற பயணியர் நிழற்கூடம் பின்புறமாக வடிகால் அமைத்து நீரை வெளியேற்ற வேண்டும்.
மழை நீர் வழிந்தோட வழியின்றி ரோட்டிலே தேங்கி நிற்பதால் ரோடு விரைவில் சேதமாகிறது. மேலும் இப்பகுதியில் பொது சுகாதார வளாக வசதியில்லாதால் பலரும் திறந்த வெளியை அசுத்தம் செய்யும் நிலை உள்ளது. செட்டிகளத்துார், புதுகொம்பேறிபட்டி, கருங்கல்பட்டி கிராமங்களில் நாடக மேடை அமைக்க வேண்டும்.
-பாலம் அமைக்காது தவிப்பு பி.நாகராஜ், ஐ.டி.,பிரிவு ஒன்றிய துணை செயலாளர், அ,தி.மு.க., மம்மானியூர்: கொம்பேறிபட்டி மம்மானியூர் ரோடு சேதமடைந்து கிடப்பதால் இப்பகுதி மக்கள் அதிக சிரமப்படுகின்றனர். காலை 10:00 மணிக்கு ஸ்ரீராமபுரத்துடன் திரும்பும் பஸ்சை மம்மானியூருக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.
ஊ ரனு ாரில் காவிரி நீர் திட்டம், சமுதாய கூடம், நாடக மேடை திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். மம்மானியூர் அரசபுரம் ரோட்டில் குறுக்கிடும் ஓடையில் பாலம் அமைக்க வேண்டும், மம்மானியூரில் இடிக்கப்பட்ட பள்ளி வகுப்பறை கட்ட டத்தை மீண்டும் கட்டி தர வேண்டும்.

