/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போதுமான தண்ணீர் சப்ளை இல்லை பழநி 28 வது வார்டு மக்கள் அவதி
/
போதுமான தண்ணீர் சப்ளை இல்லை பழநி 28 வது வார்டு மக்கள் அவதி
போதுமான தண்ணீர் சப்ளை இல்லை பழநி 28 வது வார்டு மக்கள் அவதி
போதுமான தண்ணீர் சப்ளை இல்லை பழநி 28 வது வார்டு மக்கள் அவதி
ADDED : அக் 09, 2025 04:45 AM

பழநி : தண்ணீர் தொட்டி சேதத்தால் போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் பழநி நகராட்சி 28 வது வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
குரும்பபட்டி, பாட்டாளி தெரு, திலகர் வீதி பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் குரும்பபட்டியில் சாக்கடை கழிவு நீர் வெளியேறாது தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடுடன் நோய் தொற்றுக்கு வழிவகுக்கிறது. வடிகால் முறையாக அமைக்காததால் மழை காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் சூழலும் உள்ளது. பூங்காக்கள் பராமரிக்கப்படாமல் இங்குள்ள விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்துள்ளன. இங்கு போலீசார் ரோந்து பணியையும் தீவிர படுத்த வேண்டும் என்கின்றனர் வார்டு மக்கள் .
வாரம் ஒருமுறை குடிநீர் அய்யம்மணி, குடும்பத் தலைவி, பூந்தோட்டம் : குரும்பபட்டி,பூந்தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி காட்சி பொருளாக உள்ளது. குடிநீர் மட்டுமே வருகிறது. ஜிகா குழாயிலும் சிறிதளவு மட்டுமே தண்ணீர் வருகிறது . இதனால் இங்குள்ள சேதமான உப்பு தண்ணீர் தொட்டியை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
நாய் தொல்லையால் அவதி சத்யா,குடும்பத்தலைவி, குரும்பபட்டி : சாக்கடை பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. மழை காலம் ஏற்பட்டால் தண்ணீர் வீட்டுக்குள் வருகிறது .மழை வருவதற்குள் சாக்கடையை சரி செய்து தர வேண்டும். சாக்கடையை சரியாக கட்டப்படாததால் தண்ணீர் தேங்கி உள்ளது. தெருக்களில் நாய் தொல்லையும் அதிக அளவில் உள்ளதால் மக்கள் பாதிக்கின்றனர்.
விரைவில் பூங்கா சீரமைப்பு அகிலாண்டம், கவுன்சிலர் (அ.தி.மு.க.,) : பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதால் சாக்கடை பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் . இங்குள்ள பூங்கா விரைவில் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. நாய் தொல்லை குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொசு மருந்தும் அடிக்கடி அடிக்கப்பட்டு வருகிறது என்றார்.