sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 குடிநீர் தட்டுப்பாடு; வனவிலங்குகள் இடையூறு; சேதமடைந்த ரோடு அடிப்படை வசதிகள் இன்றி திண்டாடும் பூலத்துார் ஊராட்சி மக்கள்

/

 குடிநீர் தட்டுப்பாடு; வனவிலங்குகள் இடையூறு; சேதமடைந்த ரோடு அடிப்படை வசதிகள் இன்றி திண்டாடும் பூலத்துார் ஊராட்சி மக்கள்

 குடிநீர் தட்டுப்பாடு; வனவிலங்குகள் இடையூறு; சேதமடைந்த ரோடு அடிப்படை வசதிகள் இன்றி திண்டாடும் பூலத்துார் ஊராட்சி மக்கள்

 குடிநீர் தட்டுப்பாடு; வனவிலங்குகள் இடையூறு; சேதமடைந்த ரோடு அடிப்படை வசதிகள் இன்றி திண்டாடும் பூலத்துார் ஊராட்சி மக்கள்


ADDED : மார் 07, 2026 07:09 AM

Google News

ADDED : மார் 07, 2026 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாண்டிக்குடி: தொடரும் குடிநீர் தட்டுப்பாடு, அச்சுறுத்தும் தெருநாய்களால் அச்சத்தில் மக்கள், கேட்பாரின்றி சுற்றித்திரியும் கால்நடைகள், சேதமடைந்த ரோடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு, காட்டு மாடுகள், குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகளால் வேளாண் சாகுபடி பாதிப்பு, நீராதாரங்கள் வறண்டு விட்டதால் குடிநீர் வினியோகத்தில் தட்டுப்பாடு என பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி கொடைக்கானல் ஒன்றியம் பூலத்துார் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் சிரமப்படுகின்றனர்.

இவ்வூராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. 2500 பேர் வசிக்கின்றனர். ஒட்டாங்கன்னி பகுதியில் 2 கிணறுகள், அய்யான்குளம் கானல் பகுதி, ஜே.பி.,நகர், புதுக்கிணறு என மொத்தம் 5 கிணறுகளில் உள்ள நீரை 'பம்பிங்' செய்து எடுக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் குடிநீராக ஊராட்சி மக்களுக்கு வழங்கப்பட்டது.

குடிநீர் தட்டுப்பாடு பருவமழை பொய்த்து போனதாலும், குடிநீர் ஆதாரங்களாக உள்ள கிணறுகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததாலும், துார்வாராததாலும் நாள்தோறும் வழங்க வேண்டிய ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் குறைக்கப்பட்டு 40 ஆயிரம் லிட்டர் மட்டுமே வழங்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வூராட்சி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் நிலை தொடர்கிறது.

நாய்களால் அச்சம் கோடை வெயிலின் தாக்கத்தால் நீராதாரங்கள் வறண்டுவிட்டன. ஊராட்சியில் ஜே.பி.நகர், மணத்தாவு உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த ரோடு, தெருக்களில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. காட்டு மாடுகள், குரங்குகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளால் விவசாய சாகுபடி பயிர்கள் சேதமடைகின்றன. இதனால் விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்திக்கின்றனர்.

அடிப்படை வசதிகள் இல்லை ரஞ்சித், விவசாயி: ஊராட்சி குடிநீர் விநியோகத்திற்காக 5 கிணறுகள் உள்ளன. கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்வரத்து, நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான பணிகள் தரமற்று நடந்து உள்ளன. ஜே.பி., நகரில் சாக்கடை கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை உள்ளது. பழங்குடியினர் வசிக்கும் மணத்தாவு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. ஆண்களுக்கான பொதுக் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். வி.ஏ.ஓ., ஊராட்சிக்கு சரிவர வருவது இல்லை. புதிதாக விவசாய நிலங்கள் வாங்கியவர்கள் பாரம்பரிய பாதைகளை அடைப்பதால் ஏனைய விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளோம். இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

சேதமடைந்த ரோடு பூமிநாதன், விவசாயி: ஊராட்சியில் சுற்றித்திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கால்நடைகளும் ரோட்டில் சுற்றுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. கும்பரையூர் பிரிவு முதல் பூலத்துார் வரை ரோடு சேதமடைந்துள்ளது. இதனால் விபத்துக்கள் அடிக்கடி நடக்கின்றன. காட்டுமாடுகள், பன்றிகள் விவசாய பயிர்களை சேதப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், வனத்துறையினரிடம் புகார் அளித்தும் கண்டு கொள்வது இல்லை. தோட்டக்கலைத் துறை அலுவலர்களிடம் விவசாயிகள் எது கேட்டாலும் பதிலளிக்க மறுக்கின்றனர்., என்றார்.

குடிநீர் வழங்க நடவடிக்கை ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறுகையில், 'வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் நீராதாரங்களில் தண்ணீர் குறைந்துள்ளது. இருப்பினும் மக்களுக்கு குடிநீர் தடையின்றி விநியோகம் செய்கிறோம். சாக்கடை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணிகளும் தரமாக செய்யப்பட்டுள்ளன. சேதமடைந்த ரோடுகள் விரைவில் சீரமைக்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us