/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பனை விதைகள் நட்டு நீர் நிலைகளை காக்கும் மக்கள்
/
பனை விதைகள் நட்டு நீர் நிலைகளை காக்கும் மக்கள்
ADDED : அக் 29, 2025 07:20 AM

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே சீலிமுத்துநாயக்கனுார் கிராம மக்கள் பனை விதைகள் நட்டு நீர் நிலைகளை காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சீலிமுத்துநாயக்கனுார் கிராம மக்கள் தங்கள் கிராமத்தை பனை மர வனமாக மாற்றும் இலக்குடன் ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதன் முதற்கட்டமாக ஆயிரம் பனை விதைகளை அம்பளக்காரன் குளக்கரையில் நடவு செய்தனர்.இக்கிராமத்தை சுற்றிய நீர் நிலைகளான குளக்கரைகளில் பனை விதைகளை நட்டு கிராமத்தை பனை வனமாக மாற்றுவதற்கு கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர்.
பெரியவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் எனஅனைவரும் ஒன்றிணைந்து பனை விதைகளை சேகரித்து சுற்றிய கிராமங்களுக்கு முன்மாதிரியாக இந்தப் பணியை மேற்கொண்டனர்.
அழிந்து வரும் பனை மரங்களை மீட்டெடுப்பதுடன் விவசாய நிலங் களுக்கு நீர் பிடிப்பை பலப்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தங்கள் கிராமம் மட்டுமின்றி ஊராட்சி முழுவதும் பனை விதைகளை நடவு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறினர்.

