/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பஸ்சை சிறைபிடித்து மக்கள் போராட்டம்
/
பஸ்சை சிறைபிடித்து மக்கள் போராட்டம்
ADDED : அக் 14, 2025 04:33 AM
எரியோடு: எரியோடு அருகே 3 மாதமாக ஊருக்குள் வராத அரசு பஸ்சை மக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
கோவிலுார் அருகில் இருக்கும் ஆர்.புதுக்கோட்டைக்கு வேடசந்துாரிலிருந்து அழகாபுரி, கோவிலுார் செல்லும் அரசு டவுன் பஸ் தினமும் 6 முறை இயக்கப்பட்டது.
3 மாதமாக இந்த பஸ் ஆர்.புதுக்கோட்டைக்குள் வராமல் நேர் வழியில் சென்றது. இதனால் ஆர்.புதுக்கோட்டை மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் 2 கி.மீ., துாரம் நடந்து தங்கச்சியம்மாபட்டி சென்று பஸ் ஏறினர்.
இத்துடன் 10 நாட்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் மக்கள் அவதியுற்றனர். கழிவுநீர் வாய்க்கால் துார்வாரப்படாதது, புதிய ரோடு தாமதம் போன்ற பிரச்னைகளை சுட்டிகாட்டி அக்.11ல் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு கருப்பு கொடியுடன் வந்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் 3 மாதமாக வராத அரசு பஸ் நேற்று காலை 10:30 மணிக்கு வந்தது. அந்த பஸ்சை சிறைபிடித்தும், குடிநீரை முறையாக வழங்க கேட்டும் ஊராட்சி அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.
எரியோடு போலீசார், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சமரசம் செய்ய போராட்டம் முடிவுக்கு வந்தது.