UPDATED : ஜூன் 14, 2026 07:41 PM
ADDED : ஜூன் 14, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:வேல்வார்கோட்டை ஊராட்சி சேர்வைகாரன்பட்டியில் அதிகரித்த மின் இணைப்புகளை கருத்தில் கொண்டு 8 ஆண்டுகளுக்கு முன் வெள்ளபொம்மன்பட்டி ரோட்டோரம் புதிதாக மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.
இந்த டிரான்ஸ்பார்மர் 3 ஆண்டுகளுக்கு முன் பழுதான நிலையில் சீரமைப்பு பணி செய்யவில்லை. மின்சப்ளையை அருகில் இருக்கும் மற்றொரு டிரான்ஸ்பார்மருடன் இணைத்து வழங்கி வருகின்றனர்.
இதனால் கிராமத்தில் மின் அழுத்த பிரச்னை, மின் உபகரணங்கள் பழுதடைதல் உள்ளிட்டவைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். பழுதான டிரான்ஸ்பார்மரும் அதே இடத்தில் பயன்பாடின்றி உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
