தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ரோடு பள்ளங்களால் பரிதவிக்கும் மக்கள்...

ரோடு பள்ளங்களால் பரிதவிக்கும் மக்கள்...

ரோடு பள்ளங்களால் பரிதவிக்கும் மக்கள்...


ADDED : மார் 04, 2024 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2024 07:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெயர் பலகையால் அச்சம்

பட்டிவீரம்பட்டி சிறுவர்பூங்கா பெயர் பலகை சேதமடைந்து தொங்கிக் கொண்டு உள்ளது. இதனால் பூங்கா உள்ளே செல்லும் மக்கள் மீது விழும் அபாயம் இருக்கிறது. பெயர் பலகையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குமார்,பட்டிவீரம்பட்டி.------

பள்ளத்தால் பரிதவிக்கும் மக்கள்

ஒட்டன்சத்திரம் வேடசந்துார் ரோட்டில் காளாஞ்சிபட்டி மேம்பாலத்தின் அருகே வடக்கு பகுதியில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இவ்வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர். பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -

தமிழ்ச்செல்வன்,ஒட்டன்சத்திரம்.------

தொடும் துார மின்பெட்டியால் ஆபத்து

திண்டுக்கல் அங்குவிலாஸ் ரோட்டில் மின்கம்பத்தில் மீட்டர் பெட்டி சேதமடைந்தது தாழ்வாக உள்ளது. இது தொடும் துாரத்தில் இருப்பதால் மக்கள் யாரேனும் தொடும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும் விபத்து ஏற்படும் முன் இதை சீரமைக்க வேண்டும். விஜயலட்சுமி, திண்டுக்கல்.-------

நாய்களால் ஏற்படும் தொல்லை

பழநி ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் நாய்கள் சுற்றி திரிவதால் பயணிகள் அச்சத்துடன் செல்கின்றனர். கூட்டமாக நாய் சுற்றுவதால் பக்தர்கள், பயணிகள் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும். முத்துக்குமார், அடிவாரம்.-------

தொற்று பரப்பும் கழிவுநீர்

திண்டுக்கல் குடைபாறைப்பட்டி ரோடு அருகே கழிவு நீர் ஓடையில் தண்ணீர் நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. துார்வாரி கழிவுநீர் கடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சரவணன்,திண்டுக்கல்.

-------ரோடு பள்ளத்தால் அவதி

நத்தம் திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கோபால்பட்டி பகுதியில் ரோட்டோரம் ஆபத்தான பள்ளம் உள்ளது. பல மாதங்களாக பள்ளத்தை சீரமைக்காததால் விபத்துகள் நடக்கின்றன. இதைத்தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிவண்ணன், கோபால்பட்டி.--------

குப்பையால் உருவாகும் சீர்கேடு

வடமதுரை திருச்சி இணைப்பு ரோட்டோரம் குப்பையை கொட்டி தீவைக்கின்றனர். இதனால் சுவாசப் பிரச்னைகளும் நோய் பாதிப்பு அச்சத்தினாலும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். - ரவிச்சந்திரன், வடமதுரை.------

.......................................................

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us