ADDED : செப் 24, 2026 01:54 AM
அ நிறம் | அளவு
குஜிலியம்பாறை: வடுகம்பாடி சுப்ரமணிய பிள்ளையூர் பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான சேவை மைய கட்டடம் உள்ளது.
சமீபத்தில் இங்கு தையல் பயிற்சி வகுப்புகள் நடந்தன. இந்த கட்டடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக கூறி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எரியோடு போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.
