ADDED : மார் 18, 2026 06:05 AM

அ நிறம் | அளவு
தாண்டிக்குடி: தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மிளகு நாற்று உற்பத்தி பணி துவங்கியது.
தாண்டிக்குடி கீழ்மலை பகுதியில் ஏராளமான ஏக்கரில் மிளகு விவசாயம் நடக்கிறது. ஆண்டுதோறும் மிளகு உற்பத்தி பரப்பை அதிகரிக்க தடியன்குடிசை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மிளகு நாற்றுகள் குச்சி மூலம் உற்பத்தி செய்வது வழக்கம். இங்கு பன்னியூர், கரிமுண்டா வகை மிளகு நாற்றுகள் உற்பத்தியாகின்றன.
தற்போது கோடை பருவத்திற்கு ஏற்ப பசுமைக்குடிலில் நர்சரி அமைத்து நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நடவு செய்த 45 நாளில் துளிர்க்க துவங்கும். 6 மாதத்திற்கு பின் விவசாய நடவுப் பணிக்கு தயாராகும். விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட விலை அடிப்படையில் நாற்றுகளை கொள்முதல் செய்வர்.
