ADDED : ஜூலை 09, 2025 07:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : அம்பாத்துரை அருகே நடுப்பட்டி குரும்பப்பட்டி பெருமாள் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நான்கு கால சாலை பூஜைகளை தொடர்ந்து யாகசாலையில் புனித நீர் குடங்கள் மேளதாளத்துடன் கோயிலை வலம் வந்து கலசங்களில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடைபெற்றது.சுதர்சனன் ஐயங்கார் நடத்தி வைத்தார். மூலவருக்கு மகா அபிஷேகம்,தீபாரதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.