UPDATED : ஆக 29, 2026 07:37 PM
ADDED : ஆக 29, 2026 07:32 PM
பாலசமுத்திரம்:பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி மாத பிரம்மோற்ஸவ விழாவில் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.
இக்கோயிலில் ஆக.,23ல் கொடியேற்றத்துடன் பிரம்மோற்ஸவ விழா துவங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், பவளக்கால் சப்பரம், அனுமார் வாகனம், கருட வாகனம், தோளூக்கினியாள், சேஷ வாகனம் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
விழாவில் மாலை திருமகள், மண்மகள் அகோபில வரதராஜ சுவாமிக்கு திருக்கல்யாணம் விமர்சையாக நடந்தது. இதையொட்டி மாலை மாற்றுதல், கோத்திரம் கூறுதலுடன் மாங்கல்யதாரணம் நடந்தது. மணக்கோலத்தில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் பாடல்கள் பாடி, ராம நாமம் ஜெபித்து தரிசனம் செய்தனர்.
ஆக.,30 இரவு பார் வேட்டை, ஆக.,31 காலை 7:15 மணிக்கு தேரோட்டம் நடக்க உள்ளது. செப்.2., விடையாற்றி உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
