ADDED : மார் 30, 2026 07:52 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் எம்.வி.எம்.,நகர் தென்திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் மே 1 ல் திருக்கல்யாணம் நடக்கிறது .
இக்கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கல்யாணம் நாளை காலை 9:00 மணிக்கு துவங்கி நடக்கிறது. மூன்று மணி ரேத்திற்கு மேலாக நடைபெறுகிறது .இதை தேரழுந்துார் ஸ்ரீலஸ்ரீஉ,வே.பாலாஜ் பட்டாச்சார்யர் ஸ்வாமிகள் ,அர்ச்சகர்கள் ஸ்ரீராம்,குருவாயூரப்பன், அழகு கிரிதரன் நடத்துகிறார்கள். காலை 10: 30 மணிக்கு பெரியகுளம் ஸ்ரீ கிருஷ்ணதாசர் ஸ்ரீநம்மத்வர் திருக்கல்யாணம் குறித்து பேசுகிறார். தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.இதை தொடர்ந்து மாலை 4: 30 மணிக்கு பெருமாள் தாயார் சகிதம் எம்.வி.எம் ., நகரில் குறிப்பிட வீதிகளில் வரும் வருகிறார். திருக்கல்யாணத்தை முன்னிட்டு இன்று (மார்ச் 31) மாலை 4:30 மணிக்கு பத்மாவதி நாயிகா சமேத வெங்கடாஜலபதி பெருமாளுக்கு மஹா சுதர்சன ஹோம், விசேஷ திருமஞ்சனமும் நடக்கிறது.திருமஞ்சனம் ஆண்டுக்கு ஒரு முறையே நடப்பது சிறப்பாகும்.
