ADDED : பிப் 13, 2024 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். ஆபத்து படி 10 சதவீதம் வழங்க வேண்டும்.
ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சங்கரிடம் மனு வழங்கப்பட்டது.
மாநில துணைத்தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். கோட்ட தலைவர் ராஜா, செயலாளர் சீனிவாசன்,பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.