ADDED : அக் 16, 2025 05:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சத்துணவு, அங்கன்வாடி ஓய்வு ஊழியர்களுக்கு சிறப்பு பென்ஷன் ரூ. 6750 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி முதல்வருக்கு மாவட்ட நிர்வாகம் மூலமாக கோரிக்கை மனு கொடுக்கும் இயக்கம் போராட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இதற்கு மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.
துணைத்தலைவர்கள் நாராயணசாமி, விசாலாட்சி முன்னிலை வகித்தார். செயலாளர் செல்வராஜ் பேசினார்.
முன்னாள் வட்டார தலைவர் நடராஜன், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் பூமிபாலன், மாவட்ட இணைச்செயலர் பெருமாள் பேசினர். பொருளாளர் குமரம்மாள் நன்றி கூறினார்.