UPDATED : செப் 15, 2026 05:00 PM
ADDED : செப் 15, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:தோட்டனுாத்து ஊராட்சி அழகர் நாயக்கன்பட்டியில் வறட்சி காரணமாக போர்வெல் தண்ணீரின்றி வறண்டது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கிராம சபையில் அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
போர்க்கால அடிப்படையில் புதிய போர்வெல் அமைக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் திண்டுக்கல் ஒன்றிய குழு சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் அம்மையப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அருள்செல்வன், துணை செயலாளர் பாலாஜி பேசினர். ஒன்றிய தலைவர் ஸ்டாலின், பொருளாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
