/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
/
பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
ADDED : மார் 01, 2026 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டில் ஆட்டோ ஸ்டாண்ட் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பிப்.,23ல் காளியம்மன் கோயில் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உள்ளவர்களுக்கும் டூவீலரில் வந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
சிறிது நேரத்திற்கு பின் டூவீலரில் வந்த சிலர் ஆட்டோ ஸ்டாண்ட் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.
அது தரையில் விழுந்ததால் சேதம் எதுவும் இல்லை.
இச்சம்பவத்தில் அப்துல்கலாம் நகரை சேர்ந்த பூர்ணநேசன் 29, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

