/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மேம்பாலத்தில் இருந்து விழுந்த பெட்ரோல் லாரி: டிரைவர் பலி
/
மேம்பாலத்தில் இருந்து விழுந்த பெட்ரோல் லாரி: டிரைவர் பலி
மேம்பாலத்தில் இருந்து விழுந்த பெட்ரோல் லாரி: டிரைவர் பலி
மேம்பாலத்தில் இருந்து விழுந்த பெட்ரோல் லாரி: டிரைவர் பலி
ADDED : நவ 29, 2024 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: கர்நாடகாவை சேர்ந்தவர் சந்திரசேகர் 60. ஓசூர் பின்னமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கிரண் 35. ஆகிய இருவரும், மதுரையில் இருந்து பெங்களூரு சென்ற இந்தியன் ஆயில் பெட்ரோல் லாரியில் சென்று கொண்டிருந்தனர்.
திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பழநி ரோடு மேம்பாலத்தில், லாரி டயர் வெடித்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் டிரைவர் சந்திரசேகர், 60, பலியானார். அவர் உடன் இருந்த, கிரணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிரணுக்கு காயம் அதிகமாக இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.