ADDED : ஏப் 17, 2026 04:04 PM
அ நிறம் | அளவு
கன்னிவாடி:குஞ்சனம்பட்டியில் உள்ள பிச்சை சித்தர் கோயிலில் குருபூஜை விழா நடந்தது. விரதமிருந்த பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து புனிதநீர் எடுத்து வந்தனர்.
தீர்த்தம், பால் கலசத்துடன் யாகசாலை பூஜைகள், திருவாசகம் முற்றோதலுடன் குருபூஜை, மகேஸ்வர பூஜை, சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண, அன்னதானம் நடந்தது. மும்பை, காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சாதுக்கள் பங்கேற்றனர்.
