/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நெடுஞ்சாலை ஒரம் குவியும் பிளாஸ்டிக் பொருட்களால்... பாதிப்பு ; மண் வளம் பாதிப்போடு நிலத்தடி நீருக்கும் பெரும் ஆபத்து
/
நெடுஞ்சாலை ஒரம் குவியும் பிளாஸ்டிக் பொருட்களால்... பாதிப்பு ; மண் வளம் பாதிப்போடு நிலத்தடி நீருக்கும் பெரும் ஆபத்து
நெடுஞ்சாலை ஒரம் குவியும் பிளாஸ்டிக் பொருட்களால்... பாதிப்பு ; மண் வளம் பாதிப்போடு நிலத்தடி நீருக்கும் பெரும் ஆபத்து
நெடுஞ்சாலை ஒரம் குவியும் பிளாஸ்டிக் பொருட்களால்... பாதிப்பு ; மண் வளம் பாதிப்போடு நிலத்தடி நீருக்கும் பெரும் ஆபத்து
ADDED : ஜன 20, 2026 07:09 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் சாலைகள், பொதுவெளிகளில் துாக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள், கழிவுகளால் மண்வளம், மழைவளம் கெடுவதோடு சுற்றுச்சுழல் நலனுக்கும் பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது.
திண்டுக்கல், சுற்றுலாத்தலங்கள் நிறைந்த இயற்கை வளம் மிக்க மாவட்டமாகும். தமிழகத்தில் சுற்றுலா சார்ந்து அதிக வருவாய் ஈட்டும் மாவட்டங்களில் திண்டுக்கலுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உள்ளது. அதற்கேற்றவாறு மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்கவும் சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.இந்நிலையில் மாவட்டத்தின் இயற்கை சமநிலையை குலைக்கும்விதமாக பிளாஸ்டிக் பாட்டில்கள், கழிவுகள் சாலைகளில் துாக்கி வீசப்படுவது அதிகரித்துள்ளது. தென் மாவட்டங்கள் மட்டுமின்றி, கோவை, சேலம், ஓசூர், திருச்சி, சென்னை என முக்கிய நகரங்களை இணைக்கும் 7 தேசிய நெடுஞ்சாலைகள் திண்டுக்கல் வழியே செல்கின்றன.தினமும் பல லட்சக்கணக்கான வாகனங்கள், பயணிகள் கடந்து செல்லும் பகுதியாக திண்டுக்கல் விளங்கும் நிலையில் கார், டூவீலர்களில் பயணிப்போர் நெடுஞ்சாலைகளில் காலி குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், கழிவுகளை வீசிச்செல்கின்றனர். இவை உள்ளாட்சி அமைப்புகள் துவங்கி நகரங்கள் வரை பரவி உள்ளது. சாலைகள், நீரோடைகள், வாய்க்கால் வரப்புகளில் வீசப்படும் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆண்டுக்கணக்கில் மக்காமல் கிடப்பதால் மண் வளம் பாதிக்கிறது. நிலம் மலட்டுத்தன்மை அடைந்து பயிர் விளைச்சலுக்கும் கேடு ஏற்படுத்துகிறது.இயற்கைக்கும், மனிதனுக்கும் கேடு விளைவிக்கும் இதுபோன்ற கழிவுகளை அகற்றவேண்டும். இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் அதிகமாக மேற்கொள்ளவேண்டும்.
..........------கண்துடைப்பு நடவடிக்கை
மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு எதிரான விழிப்புணர்வு கண்துடைப்புக்கு நடப்பதே முதல் காரணம். சமூக பொறுப்புணர்வு, பிளாஸ்டிக்குக்கு மாற்றான பயன்பாடு பொதுமக்களின் கடமை. குப்பையை முறைகளை தரம்பிரித்து அவற்றிற்கான இடத்தில் கொட்டுதல் குறித்து கூடுதல் விழிப்புணர்வு நடவடிக்கை தேவை. பொதுமக்களும், தைப்பூசத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டம் வரும் பக்தர்களும் சுற்றுச்சூழல் கேடு ஏற்படுத்தாத விதம் விழிப்புணர்வுவோடு பயணம் மேற்கொள்ளவேண்டும். நாம் துாக்கிவீசும் குப்பை மண்ணுக்கு மட்டுமல்ல நிலத்தை வாழ்வாதாரமாக நினைக்கும் விசாயத்துக்கும், உழவுக்கும், கால்நடைகளுக்கும் கேடு என்பதை நினைவில் நிறுத்தவேண்டும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் சாலைகளில் துாக்கிவீசப்பட்டு கிடக்கும் பாட்டில்கள், குப்பை , கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.--குப்புசாமி, விவசாயி, பழநி.
...............

