ADDED : ஜன 26, 2026 05:26 AM

அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் அருகே பெரிய விநாயகர் கோயிலில் நத்தம் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் உழவார பணிகள் நடந்தது.
இதில் கோயிலில் உள்ள மூலவர் சன்னதி, பரிவார தெய்வங்களின் சன்னதிகளிலும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டு, வளாகத்தில் கிடந்த குப்பை அகற்றபட்டன.
பின்னர் வெளி பிரகாரத்தில் இருந்த செடி, கொடிகள் அகற்றபட்டன. இப்பணிகளில் நத்தம் சிவனடியார்கள் திருக்கூட்டத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
