ADDED : மார் 04, 2026 06:14 AM

திண்டுக்கல்: தமிழகம் முழுதும் இயற்கை வேளாண் சாகுபடி, தண்ணீர் பயன்பாடு, பாதுகாப்பு, சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் 'யுனெடட் ஸ்டேட்ஸ் ஆப் இண்டியா' கட்சியின் பிரிவான அனைத்து இந்திய விவசாயிகள்சங்கம் சார்பில் 'உழவன் தேர்' வீதி உலா நடக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பனகல் பூங்கா அருகே 2025 டிச.,28ல் துவங்கிய விழிப்புணர்வு தேர் டெல்டா, வட மாவட்டங்களில் பிரசாரம் முடிந்து நேற்று திண்டுக்கல் வந்தடைந்தது.
போலீசாரின் அனுமதி பெற்று பஸ் ஸ்டாண்ட், பழநி ரோடு, திருச்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் சேகர் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி புறநகர் பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை நடந்தன.
இன்று தேனியில் விழிப்புணர்வு நடக்க உள்ளது என மண்டல ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
