பிளஸ் 2 துணைத்தேர்வர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு பட்டியல் இன்று வெளியீடு
பிளஸ் 2 துணைத்தேர்வர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு பட்டியல் இன்று வெளியீடு
ADDED : ஆக 26, 2026 09:32 PM
திண்டுக்கல், ஆக.27
‘மாவட்டத்தில் 2026ல் ஜூன், ஜூலை பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதியதில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று (ஆக.27ல்) பகல் 11:00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது’ என திண்டுக்கல் மாவட்ட தேர்வுகள் உதவி இயக்குநர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:
இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. மறுகூட்டல், மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிப்பு வெளியிடப்படும்.
இதுகுறித்து எழுத்துப்பூர்வ கோரிக்கை ஏதும் இருப்பின் dgeh3section@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செப்.,7 மாலை 5:00 மணிக்குள் தெரிவிப்பது அவசியம் என்றார்.
