ADDED : மார் 16, 2026 06:23 AM
அ நிறம் | அளவு
பழநி: திண்டுக்கல் வடக்கு மாவட்ட பா.ம.க., சார்பில் செயற்குழு கூட்டம் பழநியில் நடந்தது. மாவட்ட செயலாளர் வைரமுத்து தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஜஸ்டின் திரவியம், ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் அல்வின் அமலபிரசன்னா, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ராஜரத்தினம், மாவட்ட துணைச்செயலாளர் குமார், மாவட்ட துணைத்தலைவர் குமரிஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பழநியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட ரோடுகளை சீரமைக்க வேண்டும். வரதமா நதி பாசன பகுதியில் 18 குழாய் குளங்களில் நீர்வழிப்பாதைகள், ஒட்டன்சத்திரம் குடிநீர் ஆதாரமான பரப்பலாறு அணையை தூர்வார வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
