ADDED : மார் 16, 2026 06:15 AM
அ நிறம் | அளவு
கன்னிவாடி: ஆத்தூர் தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பா.ம.க., நிர்வாகிகள் கூட்டம் அனுமந்தராயன்கோட்டையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் எடிபால் தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர்கள் அலகுவேல், ராஜா, பேரூர் செயலாளர் மருதமுத்து, வன்னியர் சங்க நிர்வாகி கார்த்தி, நிர்வாகிகள் அருளானந்தம், சவேரியார் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் மணி, செயலாளர் சிவக்குமார், மாநில துணைத்தலைவர் ஜஸ்டின் ஆகியோர் சட்டசபை தேர்தலில் இயக்க செயல்பாடுகள் குறித்து பேசினர். ஒன்றிய நிர்வாகிகள் சூர்யா, ஜான் பிரிட்டோ, நெப்போலியன் பங்கேற்றனர்.
