/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஹிந்து அறநிலையத்துறைக்கு போலீஸ் சங்கம் கண்டனம்
/
ஹிந்து அறநிலையத்துறைக்கு போலீஸ் சங்கம் கண்டனம்
ADDED : ஏப் 08, 2025 04:53 AM
பழநி: திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாடு காவல்துறை ஓய்வு நலச்சங்க இணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் அறிக்கை:
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்ட பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் ஹிந்து அறநிலைய துறை ஊழியர்கள் தடுத்து பேச்சு வார்த்தைக்கு பின் அனுமதித்து உள்ளனர்.
இது தொடர்பாக சங்கம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். திருவிழா காலங்களில் காவல்துறை கட்டுப்பாட்டில் பாதுகாப்பு பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும்.
இதுகுறித்து அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். கோயில் செக்யூரிட்டிகள் பக்தர்களிடம் சண்டையிடுகிறார்கள். விழா இல்லாத நேரங்களில் கோயில் பணியாளர்களே பணி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

