மாடு திருடியவர் கைது
திண்டுக்கல்: ஆர்.எம்.காலனி 5 வது தெருவை சேர்ந்தவர் தண்டபாணி30. இவர் தனது மாடை வீட்டின் அருகே கட்டி வைத்திருந்தார். இதை செட்டிநாயக்கன்பட்டி குமரேசன் திருடினார். இவரை மேற்கு போலீசார் கைது செய்தனர்.
மிரட்டியவர் கைது
திண்டுக்கல்: மேற்கு மரியநாதபுரம் சிவயோக ஞானசுந்தர்40. ரவுண்ட்ரோடு பகுதியில் கத்தியை காட்டி வருவோரை மிரட்டினார். வடக்கு போலீசார் அவரை கைது செய்தனர்.
விபத்தில் காயம்
சாணார்பட்டி : ஒத்தக்கடையை சேர்ந்தவர் முருகன் 30. இவர் டூவீலரில் கணவாய்பட்டி அருகே சென்ற போது ரோட்டிலிருந்த பேரிகார்டு மீது மோதி கீழே விழுந்து காயமானார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி பெண் பலி
நத்தம் : குட்டுப்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி 66, மனைவி சின்னம்மாள் 60. நேற்று முன்தினம் குட்டுப்பட்டி புதுாரில் ரோடை கடக்க முயன்ற போது மதுரை நோக்கி சென்ற கார் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட சின்னம்மாள் இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

