sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 25, 2026 ,பங்குனி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 போலீஸ் செய்திகள்... திண்டுக்கல்

/

 போலீஸ் செய்திகள்... திண்டுக்கல்

 போலீஸ் செய்திகள்... திண்டுக்கல்

 போலீஸ் செய்திகள்... திண்டுக்கல்


ADDED : ஜன 12, 2026 05:11 AM

Google News

ADDED : ஜன 12, 2026 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கார் விபத்தில் மூவர் காயம் வேடசந்துார்: ஒட்டநாகம்பட்டி கொத்தனார் சீனிவாசன் 34. இவர், தனது டூவீலரில் உறவினரான முருகேசனை ஏற்றிக் கொண்டு, இருவரும் ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் ரோட்டில் சென்றனர். சுள்ளெறும்பு நான்கு ரோடு சந்திப்பு வந்தபோது, எதிரே வந்த திண்டுக்கல் ஆர்.எம்.காலனி சிவநாத் ஓட்டி வந்த கார், மோதி விபத்து நடந்தது. இதில் துாக்கி வீசப்பட்ட சீனிவாசன், முருகேசன் இருவரும் பலத்த காயமடைந்தனர். ரோட்டின் ஓரமாக நின்றிருந்த சுள்ளெறும்பு பொன்ராஜ் என்பவர் மீது கார் மோதியதில், அவருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த மூவரும் வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

இருவர் கைது பழநி: சிவகிரிபட்டி பொன்குமார் 30. அதேப்பகுதி தனுஷ் 24. இருவரும் கஞ்சா உடன் சுற்றி திரிந்தனர். இவர்கள் பழநி திண்டுக்கல் ரோடு பயணியர் விடுதி அருகே தனியார் பள்ளியின் முன் நின்றிருந்தனர். நகர் டவுன் போலீசார் 75 கிராம் கஞ்சாவை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

டூவீலர் விபத்தில் ஓய்வு ஆர்.ஐ., காயம் தாடிக்கொம்பு: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஏழுமலையான் நகர் ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் அக்பர் 62. இவரது மகள் பர்வீன்பானு 25. ஹோமியோபதி டாக்டர். இருவரும் டூவீலரில் எம்.வி.எம்., கல்லுாரி மேம்பாலத்தில் சென்றனர். அதே ரோட்டில் இவர்களுக்கு பின்னால் வந்த, டூ வீலர் மோதி விபத்து நடந்தது. இதில் 2 டூவீலர்களில் சென்ற 3 நபர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அக்பர் திண்டுக்கல் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார். ஹோமியோபதி டாக்டர் புகாரில் விபத்து ஏற்படுத்திய திண்டுக்கல் முருகபவனம் ஆகாஷ் மீது, தாடிக்கொம்பு எஸ்.ஐ., சூரியகலா வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us