sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 போலீஸ் செய்திகள்...

/

 போலீஸ் செய்திகள்...

 போலீஸ் செய்திகள்...

 போலீஸ் செய்திகள்...


ADDED : பிப் 01, 2026 06:17 AM

Google News

ADDED : பிப் 01, 2026 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலிபர் கொலை

இடையகோட்டை: ஒட்டன்சத்திரம் அருகே கே.அத்திக்கோம்பை பெருமாள் 25. திருமணம் ஆகவில்லை. இவரை கொலை செய்து, ஜவ்வாதுபட்டி நங்காஞ்சி ஆற்றுப் பாலத்தின் கீழ் தண்ணீரில் உடலை வீசி சென்றுள்ளனர். பெருமாளின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலை செய்தவர்கள் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து இடையக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் தொழிலாளி பலி

எரியோடு: திண்டுக்கல் சீலப்பாடி ஆரோக்கியசாமி நகர் கூலித் தொழிலாளி பரமன் 56. தனியார் விவசாய தோட்டத்தில் பணிபுரிந்த இவர் தொட்டணம்பட்டி பகுதியில் திண்டுக்கல் - கரூர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

அரசு, தனியார் பஸ் விபத்தில் மூவர் காயம்

தாடிக்கொம்பு: ராமநாதபுரம் சாயல்குடியில் இருந்து அரசு பஸ் கோவை நோக்கிச் சென்றது. பஸ்சை கோவை கடம்பாடி அரசு பஸ் டிரைவர் ஐயப்பன் 55, ஓட்டினார். பொள்ளாச்சி கணபதிபாளையம் வீரமணி கண்டக்ராக பணியில் இருந்தார். திண்டுக்கல் - பழநி ரோடு ராமையன்பட்டி அருகே அரசு பஸ் சென்றது. அப்போது பழனி பாதயாத்திரை பக்தர்களின் கூட்டம் அதிகளவில் ரோட்டில் சென்றனர். இதனால் அரசு பஸ் டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கினார். அப்போது அதே வழித்தடத்தில் மதுரை கே.புதுார் டிரைவர் சுபாஷ் ஓட்டி வந்த தனியார் ஆம்னி பஸ், அரசு பஸ்சின் பின்பகுதியில் பலமாக மோதியதில், விபத்து நடந்தது. இதில் அரசு பஸ்சின் பின்புற பகுதி பலத்த சேதமடைந்தது. பின்புற கண்ணாடிகள் சிதறின. பஸ்சில் வந்த பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. தனியார் ஆம்னி பஸ்சில் பயணித்த திருநெல்வேலி ஆண்டனி, ராமநாதபுரம் மண்டபம் செல்வம், முதுகுளத்துார் நிதீஷ்குமார் ஆகிய மூவரும் காயம் அடைந்தனர். கோவை அரசு பஸ் டிரைவர் ஐயப்பன் புகாரில், தாடிக்கொம்பு எஸ்.ஐ., சூரியகலா வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

ஒட்டன்சத்திரம்: காமாட்சிபுரம் நாட்ராயண் 44. இவர் தனது டூவீலரில் ஸ்ரீராமபுரம் அருகே சென்றார். திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

நீதிமன்றத்தில் விவசாயி சரண்

ஒட்டன்சத்திரம்: 2006ல் ஒட்டன்சத்திரம் வனத்துறை சத்திரப்பட்டி பிரிவு கோம்பைப்பட்டியில் தோட்டத்து வேலியில் மின்சாரம் பாய்ச்சி இருந்ததால், பெண் யானை உயிரிழந்தது. இதுகுறித்து கிழக்கு ஆயக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபாலனை 61, வனத்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் பழநி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2019ல் ஜெயபாலனை குற்றவாளி என உறுதி செய்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. பழநி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் குற்றவாளியின் மேல்முறையீட்டு மனு 2021ல் தள்ளுபடி செய்யப்பட்டு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. மீண்டும் இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து குற்றவாளியை சரணடையுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் பழநி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜெயபாலன் சரண் அடைந்தார். அவர் போலீசார் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

முதியவர் உடல் மீட்பு

ஒட்டன்சத்திரம் : காவேரியம்மாபட்டி பெருமாள் 80. இங்குள்ள கிணறு ஒன்றில் அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. முதியவரின் இறப்பு குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us