கார் மோதி வாலிபர் பலி
வடமதுரை: வடமதுரை நடுத்தெருவை சேர்ந்தவர் குமரகுரு 27. நேற்று முன்தினம் இரவு டூவீலரில் திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலையில் வெள்ளபொம்மன்பட்டி பிரிவை கடந்த போது கார் மோதி இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆட்டோ விபத்தில் சிறுமி பலி
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த ஏ.வெள்ளோடு சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தேவராஜ்.இவரது மனைவி சகாயராணி 32. இவர்களுக்கு ஜெரோன், செபஸ்டின் அபர்னா என இரு பிள்ளைகள் உள்ளனர். 15 நாட்களுக்கு முன் தேவராஜ் உடல்நல குறைவால் இறந்தார். இந்நிலையில் சகாயராணி தாய் அன்பு ரோஸ் 55, மகன் ஜெரோன் 10, மகள் செபஸ்டின் அபர்னா 4, சகோதரி ரோஸ்லின் 20, அவரது மகள் விமலிகா 3 ஆகிய 7 பேர், அதே பகுதியை சேர்ந்த உறவினர் லட்சுமணன் 27 ,ஆட்டோவில் திண்டுக்கல் தோமையார்புரம் அருகே சென்ற போது ஆட்டோர கவிழ்ந்து விபத்துக்குள்ளானது 7 பேரும் காயமடைந்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில்சிறுமி செபஸ்டின் அபர்னா இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.