கடன் பிரச்னையால் பெண் தற்கொலை
நத்தம் :- மதுரை மாவட்டம் பாலமேடு-எர்ரம்பட்டியை சேர்ந்தவர் அழகுராஜா 34. சென்னையில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கமலாதேவி 27.  கணவர் சென்னையில் வேலை பார்த்து வருவதால் நத்தம் அருகே பெரியமுளையூரில் உள்ள தனது அம்மா வீட்டில் கமலாதேவி  உள்ளார்.   கடன்பிரச்னையால்   சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த  கமலாதேவி  தென்னைமர மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.  மதுரை அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ்சில் சிக்கி பெண் பலி
ஆயக்குடி: ஆயக்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே பழநி நோக்கி டூவீலரில் (ஹெல்மெட் அணியாமல்) பாச்சலுாரை சேர்ந்த சிவ சண்முகம் ,மனைவி செல்வி 45, இருவரும் வந்தனர்.
அப்போது நிலைத்தடுமாறி அருகில் வந்த அரசு பஸ் சக்கரத்தில் விழுந்தனர். இதில் செல்வி உடல் நசுங்கி  பலியானார்.  ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
இளம்பெண் மாயம்
வடமதுரை: தென்னம்பட்டி எலப்பார்பட்டியை சேர்ந்த மில் தொழிலாளி ரம்யா 19. நுாற்பாலை பணிக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. வடமதுரை போலீசார் தேடுகின்றனர்.
தற்கொலை
ஒட்டன்சத்திரம்: கொல்லபட்டி கே.கே .நகரை  சேர்ந்தவர் முத்து 52. குடும்ப பிரச்னை காரணமாக  வீட்டில் விஷம் குடித்தார். கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சேவல் சூது: 3 பேர் கைது
வடமதுரை: தாமரைப்பாடி ரயில் ஸ்டேஷன் அருகே சேவல்களை சண்டையிட செய்து சூதாட்டம் நடத்திய  கோனுார் மணிகண்டன் 35, குட்டத்துபட்டி வசந்தகுமார் 28, லோகநாதன் 20, ஆகியோரை வடமதுரை போலீசார் கைது செய்தனர்.  ரூ.600  பறிமுதல் செய்யப்பட்டது.

