டிராக்டர் மோதி விபத்து
நத்தம்: உலுப்பகுடியை சேர்ந்த விவசாயி வெள்ளைச்சாமி 26. இவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் நத்தம் காய்கறி மார்க்கெட்டிற்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். குட்டூர் பிரிவு அருகே எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திரும்ப முயன்ற டிராக்டர் பைக் மீது மோதியது. வெள்ளைச்சாமியின் காலில் டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கி வலது காலில் முறிவு ஏற்பட்டது. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சூதாடியவர்கள் கைது
வடமதுரை: செங்குறிச்சி மந்தைக்குளம் பகுதியில் சூதாடிய பாலசுப்பிரமணி 38, அருண்குமார் 30, நாகராஜ் 28, சின்னராஜா 40, உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.1,580 சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. காமராஜபுரம் மயான பகுதியில் சூதாடிய புங்கம்பாடி கார்த்திக் 31, பசுபதி 35, சின்னழகுபட்டி குப்புச்சாமி 36 ஆகியோர் கைதாகினர்.