ADDED : அக் 22, 2025 01:15 AM
கறிக்கடை போடுவதில் தகராறு; வெட்டு
வேடசந்துார்: ஐயப்பா நகரை சேர்ந்தவர் ஜீவா 30. நாகம்பட்டி குடகனாறு ஓரப்பகுதியில் பன்றிகளை வளர்த்து வரும் இவர் பன்றி கறிக்கடையும் நடத்தி வருகிறார். மாரம்பாடியில் கறிக்கடை போடுவதில் இவருக்கும் தாடிக் கொம்பை சேர்ந்த மூனீஸ்வரன்31 ,க்கும் தகராறு இருந்து வந்துள்ளது. ஆத்திரமடைந்த மூனீஸ்வரன் சிலருடன் சேர்ந்து ஜீவாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி பலி
கொடைக்கானல்: பூம்பாறையை சேர்ந்தவர் கணேஷ் 52. அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் ஓட்டல் முன் நின்ற போது கார் மோதி இறந்தார்.கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி தற்கொலை
நத்தம் : சின்னமலையூரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி நாகராஜ் 22. இவரது மனைவி ஜெயலெட்சுமி 21. நாகராஜ் மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் குடும்பத்திற்குள் தகராறு இருந்து வந்துள்ளது. இதனிடையே சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த நாகராஜ் அக்.19 இரவு விஷம் குடித்து இறந்தார். -எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் விசாரிக்கிறார்.