UPDATED : செப் 24, 2026 05:56 PM
ADDED : செப் 24, 2026 05:51 PM
மூவர் தற்கொலை
சாணார்பட்டி: அஞ்சுகுழிப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் அழகர்சாமி 19. கூடை பின்னும் தொழில் செய்து வந்தார். சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவருக்கு சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. மன உளைச்சலில் இருந்த அழகர்சாமி வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்தார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
* செடிப்பட்டியை சேர்ந்தவர் சின்னபொதியன் மகன் பொன்னுவெள்ளை 31. கொத்தனார் வேலை செய்து வந்தார். தனது தோட்டத்து வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதற்கான காரணம் குறித்து சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
* வடுகம்பாடி பாரதிநகர் ஐயப்பன் மகள் கயல்விழி 26. தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். கடைக்கு பின்புறம் உள்ள கோடவுனில் துாக்குப்போட்டு தற்கொலை செய்தார். குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
