மாயமான சிறுவர்களை ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீசார்
மாயமான சிறுவர்களை ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீசார்
ADDED : மே 28, 2026 03:57 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் மாயமான இரு சிறுவர்களை போலீசார் ஒரு மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் அருள் ராபர்ட். இவரது மகள் சார்வீ 9. இதே பகுதியை சேர்ந்த ஜெரால்ட் மகன் ஆண்டனிஅத்வேக் 9. நேற்று காலை இருவரும் மாயமாகினர். பல இடங்களில் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நேற்று இரவு கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தனர்.
தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் காணாமல் போன சிறுவர்களை தேடினர்.
தெருவில் விளையாடி விட்டு தாமதமாக வருவதை பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் கொடைக்கானலில் இருந்து பழநிக்கு செல்லும் பஸ்சில் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சிறுவர்களை பழநியில் கண்டுபிடித்த போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்து அறிவுரை வழங்கினர். புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் சிறுவர்களை போலீசார் மீட்டது குறிப்பிடத்தக்கது.
