/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வரதட்சணை கேட்டு பெண் கொலையா போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
/
வரதட்சணை கேட்டு பெண் கொலையா போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
வரதட்சணை கேட்டு பெண் கொலையா போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
வரதட்சணை கேட்டு பெண் கொலையா போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை
ADDED : டிச 28, 2025 05:56 AM
கொடைரோடு: பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், வரதட்சணை கேட்டு, கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
கொடைரோடு அருகே இராமராஜபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் 30. ஒலிபெருக்கி உரிமையாளரான இவருக்கும், சடையாண்டிபுரத்தைச் சேர்ந்த சிவகாமி 26 என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. 3-வயதில் சுபஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.
கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவகாமி மர்மமான முறையில் உயிரிழந்தார். அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரித்து வந்த நிலையில் சிவகாமியின் உறவினர்கள் நேற்று அம்மைய நாயக்கனூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். வரதட்சணை கொடுமையால் சிவகாமி கொலை செய்யப்பட்டார் என்றும், இந்த கொலைக்கு காரணமான அவரது கணவன் உட்பட 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதால் கலைந்து சென்றனர்.

